/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பு இடத்தில் வருவாய்துறை அளவீடு
/
ஆக்கிரமிப்பு இடத்தில் வருவாய்துறை அளவீடு
ADDED : ஜன 24, 2025 06:53 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கும்,போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடையில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் சுமார் 40 சென்ட் அளவிற்கான விவசாய நிலத்திற்க செல்லும் பாதையை சாமிவேல்,77; ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது.
இதனால் விவசாய நிலங்களுக்குச் செல்ல வழியில்லாமல் இருந்துவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் காலேஜ் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்,50; சென்னை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரணை செய்த கோர்ட் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்தாண்டு உத்தரவிட்டது. அப்போது விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தடைபட்டது.
தற்போது தாசில்தார் கிருஷ்ணதாஸ் தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு விவசாய நிலங்களை வருவாய்துறையினர் அளவீடு செய்தனர்.இதில் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

