sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பணிச்சுமை உளைச்சலில் வருவாய்த் துறையினர்

/

பணிச்சுமை உளைச்சலில் வருவாய்த் துறையினர்

பணிச்சுமை உளைச்சலில் வருவாய்த் துறையினர்

பணிச்சுமை உளைச்சலில் வருவாய்த் துறையினர்


ADDED : அக் 13, 2025 11:24 PM

Google News

ADDED : அக் 13, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த மிழகம் முழுதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு 45 நாட்களில் மனுக்கள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு தாலுகாவில் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளை பிரித்து அதிகபட்சம் 4 ஊராட்சிகளுக்கு முகாம் நடத்தி மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் மீது முகாம் நடந்த மறு நாளிலிருந்து வருவாய்த் துறை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முகாம்களில் பட்டியலிடப்பட்ட சேவைகளுக்கு எனவும், பட்டியலிடப்படாத சேவைகள் என தனிதனியாக மனுக்களை பிரித்து நடவடிக்கை எடுக்கின்றனர் . மாவட்ட நிர்வாகத்திலிருந்து வருவாய்த் துறையில் உள்ள அதிகாரிகளை கண்காணிக்க தனியாக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பெறப்பட்ட மனுக்களில் எத்தனை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என கலெக்டருக்கு அறிக்கை அனுப்பபடுகிறது.

முகாம்களில் அதிகமாக மனுக்கள் குவிவதாலும், அரசு சார்பில் மனுக்கள் மீது உடனடி தீர்வு கான நடவடிக்கை என நிர்பந்தம் காரணமாக பணிச்சுமை அதிகரித்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளா கியுள்ளனர்.

விக்கிரவாண்டி தாலுகாவில் இது வரை முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 6,082 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் பட்டியலிடப்பட்ட சேவையின் கீழ் 1256 மனுக்கள் பெறப்பட்டு அதில் 641 மனுக்கள் ஏற்கப்பட்டும், 615 மனுக்கள் நி லுவையிலும் உள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றம், யூ.டி.ஆர்., பரப்பு திருத்தம் இலவச வீட்டு மனைப் பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பட்டியலிடப்படாத சேவைகளாக நிர்ணயிக்கப்பட்டு அதில் மொத்தம் 4826 மனுக்கள் பெறப்பட்டு 1151 மனுக்கள் ஏற்கப்பட்டும், 1290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும், 2385 மனுக்கள் நிலுவையிலும் உள்ளது.

சமூக நலபாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பிரிவில் 1353 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. அதில் பட்டியலிடப்பட்ட சேவை பிரிவில் 1222 மனுக்கள் என பிரிக்கப்பட்டு பெறப்பட்டு 519 மனுக்கள் ஏற்கப்பட்டும், 83 மனுக்கள் தள்ளுபடி செய்தும், 620 மனுக்கள் நிலுவையிலும் உள்ளது. பட்டியலிடப்படாத சேவை பிரிவில் 131 மனுக்களில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டும், 19 மனுக்கள் தள்ளுபடி செய்தும், 71 மனுக்கள் நிலுவையிலும் உள்ளது.

அதே போன்று நில அளவை பிரிவில் மொத்தம் 1806 மனுக்கள் பெறப்பட்டு அதில் பட்டியலிடப்பட்ட சேவையில் 1325 மனுக்களில் 322 மனுக்கள் ஏற்கப்பட்டும், 1003 மனுக்கள் நிலுவையில் உள்ளது. பட்டயலிடப்படாத சேவையில் 481 மனுக்கள் பெறப்பட்டு அதில் 162 மனுக்கள் ஏற்கப்பட்டும், 173 மனுக்கள் தள்ளுபடி செய்தும், 146 மனுக்கள் நிலுவையிலும் உள்ளது.

இந்த மனுக்களின் மீது அரசு அறிவித்துள்ள 45 நாட்களுக்குள் தீர்வு காணமுடியாது என வருவாய் துறையினர் அரசுக்கு தெரிவித்ததால் 60 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என புதிய அரசாணை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், முகாம்களில் பொதுமக்களிடம் கூறும் போது 45 நாட்களில் தீர்வு காணுவதாக கூறுகின்றனர்.

பணிச்சுமை காரணமாக விடுமுறை நாட்களிலும் இரவு 10:00 மணிக்கு மேலும் மனு கொடுத்தவர்களிடம் போனிலும், நேரிலும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதால் பெரும் அதிருப்திக்கும், மன ஊளைச்சலுக்குள் ஆளாகி யுள்ளதாக புலம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us