/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க.,விலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைய காத்திருப்பு
/
அ.தி.மு.க.,விலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைய காத்திருப்பு
அ.தி.மு.க.,விலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைய காத்திருப்பு
அ.தி.மு.க.,விலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைய காத்திருப்பு
ADDED : அக் 13, 2025 11:25 PM
வி ழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,வில் இருந்து விலகிச் சென்ற ரத்தத்தின் ரத்தங்கள் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய மாஜி அமைச்சர் முயற்சிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி, தி.மு.க., - அ.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள் தங்களின் கூட்டணி, போட்டியிடும் தொகுதிகள், நிபந்தனைகளை கூறி தங்களுக்கான பேரத்தை துவக்கியுள்ளனர்.
இந்த சூழலில், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய நிர்வாகிகள் அ.ம.மு.க., ஓ.பி.எஸ்., அணி என தனித்தனியாக உள்ளனர்.
இவர்கள் ஒன்றிணைந்தால் தான், தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வெல்வதற்கான வியூகம் அமையும் என அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களினக எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது வரை அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மட்டுமே தேர்தலுக்கு முடிவாகியுள்ளது.
இந்த சூழலில், அ.தி.மு.க.,வில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அ.ம.மு.க., ஓ.பி.எஸ்., அணிகளுக்கு பிரிந்து சென்ற முன்னாள் எம்.பி., ஏழுமலை, ெஷரீப் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., நினைத்தால், பொது செயலாளர் பழனிசாமியிடம் பேசி முயற்சி செய்து, கட்சியை மீண்டும் ஒரே அணியாக ஒன்றிணைக்கலாம் என யோசித்து வருகின்றனர்.
ஆனால், தேர்தலுக்குள், இவர்கள் நினைப்பது போல், சண்முகம் எம்.பி., அ.தி.மு.க., ஒன்றிணைய பழனிசாமியிடம் பேசுவதற்கு முயல்வாரா என்பது புரியாத புதிராகவே உள்ளதாக ரத்தங்கள் புலம்பி வருகின்றனர்.