/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு சிறப்பு திட்ட நிகழ்ச்சிகளில் தனியார் பள்ளி வாகன டிரைவர்கள்
/
அரசு சிறப்பு திட்ட நிகழ்ச்சிகளில் தனியார் பள்ளி வாகன டிரைவர்கள்
அரசு சிறப்பு திட்ட நிகழ்ச்சிகளில் தனியார் பள்ளி வாகன டிரைவர்கள்
அரசு சிறப்பு திட்ட நிகழ்ச்சிகளில் தனியார் பள்ளி வாகன டிரைவர்கள்
ADDED : அக் 13, 2025 11:25 PM
தமிழக அரசின் சார்பில், கல்லுாரி கனவு உள்ளிட்ட பல்வேறு கல்வித்துறை நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு, தனியார் கல்வி நிறுவன வாகனங்கள் மூலம் மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பஸ், வேன் போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்ற மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த வாகனங்களில் கல்வித்துறை அதிகாரி மற்றும் ஆசிரியர் உடன் பாதுகாப்பு பணிக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் கல்வி நிறுவன வாகனங்களின் டிரைவர்களுக்கு சாப்பாடு, டீ மற்றும் டிரைவர் படி உள்ளிட்ட எவ்வித வசதியும் செய்யப்படுவதில்லை. தங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும் என டிரைவர்கள் புலம்பி வருகின்றனர்.