ADDED : நவ 12, 2024 06:17 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 9 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் செஞ்சி கோவிந்தன் சாத்தாம்பாடி குறுவட்டத்திற்கும், சிறுவாடி ஜெய்கணேஷ் செஞ்சிக்கும், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கோமதி சிறுவாடிக்கும், ஒலக்கூர் விஜயலட்சுமி கஞ்சனுாருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சர்மிளாதேவி, ஒலக்கூருக்கும், வளவனுார் கதிர்வேல் விழுப்புரத்திற்கும், விழுப்புரம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி வளவனுாருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலம், விழுப்புரம் கலெக்டர் அலுவலக 'ஆ'பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் தமிழரசன் விக்கிரவாண்டிக்கும், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மேல்மலையனுாருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றத்திற்கான உத்தரவை, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி நேற்று பிறப்பித்துள்ளார்.