/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண்துறை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
/
வேளாண்துறை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
ADDED : மே 16, 2025 02:34 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண்மைத்துறை சார்பில் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், நடப்பாண்டு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் , நிகழாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கான அடையாள அட்டை, டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கீடு செய்யும் பணிகள் குறித்தும், இந்தாண்டு மானாவாரி நிலங்களில் கோடை உழவு திட்டம், குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்தாண்டில் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள நலத்திட்ட உதவிகள், பயிர்களுக்கான இழப்பீடுகள் உள்ளிட்டவைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர், துணை இயக்குநர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.