/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளுக்கு நெல் விதை விநியோகம்
/
விவசாயிகளுக்கு நெல் விதை விநியோகம்
ADDED : பிப் 23, 2026 04:14 AM

விழுப்புரம்: வளவனுார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், வி வசாயிகளுக்கு நெல் விதைகள் விநியோகம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு வேளாண் துறையில் நிதிநிலை அறிக்கை 2025-26ம் ஆண்டு அறிவிப்புகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சான்று பெற்ற விதைகள் மற்றும் இடுபொருட்கள் விநியோகம் என்ற திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.
இதையொட்டி, வளவனுார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் சுரேஷ், கோலியனுார் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பிரேமலதா, அலுவலர்கள் பாலமுருகன், அருண்மாறன், விதை ஆய்வாளர் ஜோதிமணி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் கா ண்டீபன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

