/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 14, 2024 08:30 PM

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த உறுதிமொழியை கலெக்டர் வசிக்க, மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உறுதிமொழியேற்றனர்.
பின், கலெக்டர் கூறுகையில், 'கடந்த 2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள பொது தகவல் அலுவலரிடம் தகவல் கேட்கலாம். தகவல் கேட்பதற்கு ஒரு வெள்ளை தாளில் எழுதி சம்மந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பொது தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய விவரங்களை பெற்றுத் தருவார்.
பொது தகவல் அலுவலர் அளித்த பதில் திருப்தியில்லை எனில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மேல்முறையீடு செய்யலாம். ஆணையம் தகவலை பெற்றுத்தரும்.
இதன் மூலம் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் அறிய முடியும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சதிஷ்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.