/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் அதிவேக பைக்குகளால் விபத்து அபாயம்
/
புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் அதிவேக பைக்குகளால் விபத்து அபாயம்
புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் அதிவேக பைக்குகளால் விபத்து அபாயம்
புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் அதிவேக பைக்குகளால் விபத்து அபாயம்
ADDED : மார் 18, 2025 04:43 AM
செஞ்சி: புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் அதிவேகமாக செல்லும் பைக் ஓட்டிகளால் விபத்து அபாயம் உள்ளது.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருவழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2012ம் ஆண்டு துவங்கியது. நீண்ட இழுபறிக்குப்பின் 2024ம் ஆண்டு சாலை பயன்பாட்டிற்கு வந்தது.
இதன் பிறகு இந்த வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு ஏராளமான ஆம்னி பஸ்களை இயக்குகின்றனர். பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணி புரிபவர்களில் பெரும்பாலானவர்கள் ரிலாக்ஸ் செய்வதற்கான முக்கிய கேந்திரமாக புதுச்சேரி மாறி விட்டது. அத்துடன் லாரி போக்குவரத்தும் அதிகரித்து, இரவு பகல் எப்போதும் பிசியான சாலையாக மாறியுள்ளது.
இந்த வழியாக பெங்களூருவில் இருந்து வரும் கார்களின் எண்ணிக்கைக்கு இணையாக, அதிவேக பைக்கில் வரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் உள்ளது. தனியாக வருவது மட்டுமின்றி குழுவாகவும் வருகின்றனர்.
இது போன்று வருபவர்கள் பைக் ரேஸ் நடத்தி 314 கி.மீ., துாரத்தை மூன்று மணி நேரத்தில் கடந்து விடுகின்றனர். திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட நகரங்களை கடந்து அதிவேக பைக்கில் 120 முதல் 140 கி.மீ., வேகத் தில் பறந்து செல்கின்றனர்.
இவர்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதுடன், கடந்து செல்லும் இடங்க ளில் பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்துகின்றனர்.
எனவே இதுபோன்று அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் ஆங்காங்கே வேகத்தை கணக்கிடும் கருவிகளை பொருத்தி, அதிவேகமாக செல்பவர்கள் மீது ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து இதே போல் அதிவேகமாக செல்பவர்களின் லைசன்சை ரத்து செய்ய மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.