/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மீன் மார்க்கெட்டில் குப்பை நோய் பரவும் அபாயம்
/
மீன் மார்க்கெட்டில் குப்பை நோய் பரவும் அபாயம்
ADDED : நவ 03, 2024 04:36 AM

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, அனிச்சம் பாளையம் செல்லும் சாலை யில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு, அதிகாலை 2:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மீன் வியா பாரிகள் மீன்களை விற் பனை செய்து வருகின்றனர்.
இதனால், இங்கு மீன் களை வாங்க வரும் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். மார்க்கெட்டில் குப்பைகள் பல நாட்களாக மூட்டை மூட்டைகளாக தேங்கிக் கிடக்கிறது.
இதன் மூலம் வெளியேறும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுவததோடு, அங்குள்ள மீன் வியாபாரிகளுக்கும், மீன்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
நகராட்சி துப்புரவு பணியாளர்கள், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் சென்று குப்பைகளை அப்புறப்படுத்துகின்றனர். மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் கண்டு கொள்ளாததால் அங்கு குப்பைகள் தேங்கியுள்ளது.
மீன் மார்கெட்டில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.