/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே கல்வெர்ட் உடைப்பு விபத்து ஏற்படும் அபாயம்
/
ரயில்வே கல்வெர்ட் உடைப்பு விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : நவ 30, 2024 05:10 AM

மயிலம் : மயிலம் அடுத்த கேணிப்பட்டு கிராமத்தில் ரயில் பாதையின் குறுக்கே செல்லும் கல்வெர்ட் உடைந்து பலவீனமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை தலைநகரத்தையும் தென் மாவட்டங்களை இணைக்கும் இருப்பு பாதை கேணிப்பட்டு வழியாக செல்கிறது. இந்த வழித்தடத்தில் பல்லவன், வைகை, பொதிகை உள்ளிட்ட அதிவேக ரயில்கள் தினசரி இயக்கப்படுகிறது.
மயிலம் ஒன்றியத்தில் உள்ள கேணிப்பட்டு ரயில்வே கேட்டில் இருந்து கூட்டேரிப்பட்டு செல்லும் மார்க்கத்தில் 133 / 100 கி.மீட்டரில் 409வது கல்வெர்ட்டில் இரு தண்டவாள லைன்களுக்கிடையே உள்ள கல்வெர்ட் சிலாப் உடைந்துள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால் ரயில் பாதையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகள் உடைந்த இடைவெளி வழியாக கீழே கால்வாயில் விழுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புயல் காரணமாக கல்வெர்ட் மேலும் பலவீனமடையும் நிலை இருக்கிறது. எனவே, ரயில்வே துறையினர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்து வரும் கல்வெர்ட்டை சீரமைக்க வேண்டும்.
இதுகுறித்து ரயில்வே துறை கேங் மேஸ்திரியிடம் கேட்டபோது, 'இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

