/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு; பேச்சுவார்த்தைக்கு பின் ஒத்திவைப்பு
/
சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு; பேச்சுவார்த்தைக்கு பின் ஒத்திவைப்பு
சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு; பேச்சுவார்த்தைக்கு பின் ஒத்திவைப்பு
சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு; பேச்சுவார்த்தைக்கு பின் ஒத்திவைப்பு
ADDED : டிச 09, 2024 06:57 AM

வானுார் : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்ததால், பரிக்கல்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒத்தி வைக்கப்பட்டது.
வானுார் அடுத்த பரிக்கல்பட்டு கிராமத்தில் கன மழையால், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், பரிக்கல்பட்டு மற்றும் சிறுநாவூர் பகுதியை விட்டுள்ளனர்.
இதற்கிடையே மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பக்கத்து கிராமங்களுக்கு முதல்வர் 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பரிக்கல்பட்டு மக்கள், இன்று 9ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று வருவாய் ஆய்வாளர் ரமேஷ், வி.ஏ.ஓ., ராஜூ மற்றும் மயிலம் போலீசார் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி மற்றும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை பார்வையிட்டனர். ஒவ்வொரு தெருக்களுக்கும் சென்று வீடு சேதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தாசில்தாரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதனையேற்று இன்று 9ம் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், நிவாரணம் வழங்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.