/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு இழப்பீடு கேட்டு சாலை மறியல்
/
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு இழப்பீடு கேட்டு சாலை மறியல்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு இழப்பீடு கேட்டு சாலை மறியல்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு இழப்பீடு கேட்டு சாலை மறியல்
ADDED : மார் 06, 2026 06:54 AM

விழுப்புரம்: ரயில் பெட்டியை சுத்தம் செய்தபோது, மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்ததால் இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; விழுப்புரம் ரயில் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்தபோது, மின்சாரம் தாக்கி மணிகண்டன் இறந்தார். தொடர்ந்து, அவரது உறவினர்கள் நேற்று காலை 10:20 மணிக்கு விழுப்புரம் - புதுச்சேரி சாலை பீமநாயக்கன் தோப்பு பள்ளி எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள், உபகரணங்கள் இல்லாமல் பணியில் அமர்த்திய ஒப்பந்த நிறுவன உரிமையாளரை கைது செய்ய வேண்டும். மணிகண்டன் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, காலை 10:35 மணிக்கு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

