sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 திண்டிவனத்தில் வீடிழந்தவர்களுக்கு பட்டா வழங்க கோரி சாலை மறியல்

/

 திண்டிவனத்தில் வீடிழந்தவர்களுக்கு பட்டா வழங்க கோரி சாலை மறியல்

 திண்டிவனத்தில் வீடிழந்தவர்களுக்கு பட்டா வழங்க கோரி சாலை மறியல்

 திண்டிவனத்தில் வீடிழந்தவர்களுக்கு பட்டா வழங்க கோரி சாலை மறியல்


ADDED : பிப் 12, 2026 04:29 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் வீடு இழந்தவர்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த வீடுகள், ஐகோர்ட் உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது. இதில் வீடு இழந்தவர்களுக்கு திண்டிவனம் அருகே உள் டி.பாஞ்சாலம் கிராமத்தில் பட்டா தருவதாக, வருவாய்த்துறையினர் உறுதி கூறினர்.

இந்நிலையில் டி.பஞ்சாலம் கிராமத்தில் பட்டா வழங்குவது தொடர்பாக அளவீடு செய்வற்கு வருவாய்த்துறையினர் கடந்த 31 ம் தேதி சென்ற போது, அங்குள்ள கிராம மக்கள் தங்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு, தீர்த்தக்குளம் பகுதி மக்களுக்கு கொடுங்கள் என்று எதிர்ப்பு தெரிவித்ததால், திரும்பி வந்தனர்.

இந்நிலையில் அன்றைய தினம் இரவு 7.00 மணியளவில் தீர்த்தக்குளம் பகுதியில் வீடுகளை இழந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். முதல்வர் வந்து சென்ற பின் பட்டா வழங்குவதாக அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலந்துச்சென்றனர். இந்நிலையில், முதல்வர் விழா முடிந்து ஒரு வாரம் ஆகிய நிலையில் பட்டா வழங்காததால் நேற்று இரவு 7:௦௦ மணியளவில், தீர்த்தக்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

இதனால், திண்டிவனத்திலிருந்து சென்னை மற்றும் புதுச்சேரி செல்லும் பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட க்யூ வரிசையில் தேங்கி நின்றதால், பயணிகள் அவதியடைந்தனர்.

இரவு 7:30 மணியளவில் செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் (பொறுப்பு) பேசி சமரசம் செய்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us