/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : பிப் 12, 2026 04:35 AM

விழுப்புரம்: சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை சேர்ந்தவர் நாகப்பன் மகன் கவுதமன், 31; இவர், கடந்த 2021ம் ஆண்டு ஏப்., மாதம், ஒன்பது வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். புகாரின் பேரில் திண்டிவனம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து கவுதமனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம்சாட்டப்பட்ட கவுதமனுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.