/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணத்தை திருப்பிக்கேட்டவரை கஞ்சா வழக்கில் சிக்கவைக்க முயன்ற 3 பேர் சுற்றிவளைப்பு

ADDED : பிப் 13, 2026 02:43 AM

திண்டிவனம்: பணத்தை திருப்பி கேட்டவரை, கஞ்சா வழக்கில் சிக்கவைக்க முயன்ற, சென்னையைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஜெயபுரத்தை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி சந்திரிகா, 38. இவர், சென்னையை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம், சென்னை வீட்டு வசதி வாரியத்தில் வீட்டுமனை வாங்க, 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அவர், மனை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், பணத்தை, சந்திரிகா திருப்பி தரும்படி கேட்டதாக தெரிகிறது. இந் நிலையில், நேற்று முன்தினம், திண்டிவனம் போலீசுக்கு, ஜான் வீட்டில் கஞ்சா விற்பதாக, மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார், ஜான் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்ததில், கவரில் சுற்றப்பட்டு, 250 கிராம் கஞ்சா பொட்டலம் கிடைத்தது.
விசாரணையில், ஜானுக்கும், கஞ்சாவுக்கும் தொடர்பில்லை என, தெரிந்தது. போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், இரண்டு வாலிபர்கள், ஜான் வீட்டில், கஞ்சா பொட்டலங்களை வீசி சென்றது தெரிந்தது.
விசாரணையில், கஞ்சாவை வீசி சென்றது, சென்னை, டி.பி.சத்திரத்தை சேர்ந்த கார்த்திக், 32, அயனாவரத்தை சேர்ந்த ஜெகன், 38, ஷெனாய் நகரை சேர்ந்த நாகராஜ், 42, என்பதும், பணத்தை திருப்பி கேட்டதால், சந்திரிகாவை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயன்றதும் தெரிந்தது.
இதையடுத்து, போலீசார், மூவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.