/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சாலை மறியல் விழுப்புரம்-செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : டிச 08, 2024 05:26 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பொது மக்களுக்கு நிவாரணம் கோரி கிராம மக்கள் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தாலுகா, கொய்யாதோப்பு, பாத்திமா நகர் பகுதியில் வெள்ள பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பம்பை ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாரி சீரமை க்க கோரியும் நேற்று காலை 8.30 மணியளவில், விழுப்புரம் -செஞ்சி சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியில் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவலறிந்த மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தாசில்தார் யுவராஜ் உள்ளிட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் .
கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி கூறியதன் பேரில் காலை 11.30 மணிக்கு சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து 3 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
மறியல் காரணமாக செஞ்சி செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் முண்டியம்பாக்கம், லட்சுமிபுரம் வழியாக செஞ்சிக்கு திருப்பி விடப்பட்டன.