/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவெண்ணெய்நல்லுாரில் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
/
திருவெண்ணெய்நல்லுாரில் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லுாரில் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லுாரில் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
ADDED : அக் 22, 2025 11:05 PM

திருவெண்ணெய்நல்லுார்: சாலை அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை காலனி பகுதி முதல் மற்றும் இரண்டாம் தெருவில்,50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால், மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், அப்பகுதியில் குடியிருப்புகளுக்கு தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில், நேற்று முன்தினம் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மழை காரணமாக, சில வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமாகின.
இதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறி, நேற்று காலை 8:30 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார்-திருக்கோவிலுார் சாலை, சின்னசேவலை பஸ் நிறுத்த பகுதியில், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து 9:30 மணியளவில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.