/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி
/
வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி
ADDED : அக் 22, 2025 11:05 PM

விழுப்புரம்: மாவட்டத்தில், காவல் துறை சார்பில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்தியா முழுதும் 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 2 தலைமை காவலர்கள் உட்பட இந்தியாவில் 191 போலீசார் பணியின் போது இறந்து வீரமரணம் அடைந்தனர். இவர்களுக்கு 21 குண்டுகள் முழங்க வீர வணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது
விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவு துாணிற்கு, சரக டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், டி.எஸ்.பி., ஞானவேல், ஊர்க்காவல் படை மண்டல தளபதி நத்தர்ஷா உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.