ADDED : ஜூன் 12, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; சுவர் விளம்பரத்தை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் எதிரில் புதுச்சேரி சாலையில், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையிலான கட்சியினர் நேற்று மாலை 5:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாலுகா போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் மேலமேடு பகுதியில் கட்சி சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை அழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து, 5:10 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.