/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை சேதமாகி பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலை சேதமாகி பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 22, 2025 10:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
விழுப்புரம் வி.ஜி.பி., நகரில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலை வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலை சேதமடைந்துள்ளதால் மழைநீர் தேங்கி குட்டைபோன்று காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.