/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை விதிகள் விழிப்புணர்வு முகாம்
/
சாலை விதிகள் விழிப்புணர்வு முகாம்
ADDED : டிச 15, 2025 06:38 AM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சாலை விதிகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், மூத்த சிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் பேசுகையில், 'சாலை விதிகளை கடைபிடிப்பது அனைவரின் கடமை.
பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகளை பற்றி ஆசிரியர்கள் எடுத்துக்கூறவேண்டும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படுகிறது' என்றார்.
ஆசிரியர்கள், மாணவியர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை மலர்கொடி நன்றி கூறினார்.

