UPDATED : அக் 11, 2026 06:21 PM
ADDED : அக் 11, 2026 06:16 PM

அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் குமார் தலைமை தாங்கினார். கடலுார் மண்டல பயிற்சி ஆசிரியர் பழனி, பரிசோதகர் முருகன், ஓட்டுநர் ஆசிரியர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், சாலையில் நடை பாதையில் நடந்து செல்ல வேண்டும்; பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யக்கூடாது; என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். அலுவலக பணியாளர் அமுதா மற்றும் கணேசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
