ADDED : அக் 25, 2024 07:08 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், ஏ.டி.எஸ்.பி., தினகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி, நெடுஞ்சாலைகளில் நடந்து வரும், புதிய சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தினார்.
சாலை விபத்து எங்கு நடந்தாலும் வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து, உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
அனைத்து சாலைகளிலும் வேகத்தடைகள் தொலைவில் இருந்தே தெரியும் வகையில், தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைய வேண்டும். என்பது உட்பட பொது மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.