ADDED : ஜூன் 20, 2025 11:39 PM
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக்சிரு தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் தற்போது வரை நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் பாதித்தோர் எண்ணிக்கை பற்றியும், விபத்திற்கான காரணங்கள், அப்பகுதிகளில் விபத்து நடக்காமல் தடுக்க மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் உயர்மட்ட மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
பாலம், சாலை பணிகள் நடக்கும் இடத்தில் நல்ல முறையில் சர்வீஸ் சாலைகள் இருப்பதை நெடுஞ்சாலை துறை அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திண்டிவனம் நகர பகுதிக்கு செல்லும் புறவழிச்சாலை மற்றும் திண்டிவனத்தில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பகுதிகளில் விபத்து நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை, மேம்பாலம் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எஸ்.பி., சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப் கலெக்டர் திவ்யான்சு நிகம் உட்பட பலர் பங்கேற்றனர்.