/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை பணியாளர் சங்கம் கோரிக்கை போராட்டம்
/
சாலை பணியாளர் சங்கம் கோரிக்கை போராட்டம்
ADDED : ஜன 31, 2026 05:53 AM
விழுப்புரம்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் பறை இசை முழக்க போராட்டம் நடந்தது.
விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர்கள் ராமமூர்த்தி, பைரவன், ஜோசப், ராஜா தலைமை தாங்கினர்.
மாவட்ட பொருளாளர்கள் மூர்த்தி, பரமகுரு, சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் மகேந்திரன் துவக்கவுரையாற்றினார்.
இதில், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பறை இசை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். ரமேஷ் நன்றி கூறினார்.

