sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலையோரம் மரக்கன்று நட நடவடிக்கை தேவை: நெடுஞ்சாலை, வனத்துறை கவனிக்குமா?

/

சாலையோரம் மரக்கன்று நட நடவடிக்கை தேவை: நெடுஞ்சாலை, வனத்துறை கவனிக்குமா?

சாலையோரம் மரக்கன்று நட நடவடிக்கை தேவை: நெடுஞ்சாலை, வனத்துறை கவனிக்குமா?

சாலையோரம் மரக்கன்று நட நடவடிக்கை தேவை: நெடுஞ்சாலை, வனத்துறை கவனிக்குமா?


ADDED : ஜூலை 14, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் இருந்து மேல்மலையனுார் செல்லும் சாலையில் மரக்கன்றுகள் நடுவதற்கு நெடுஞ்சாலை மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சியில் இருந்து மேல்மலையனுார் செல்ல வளத்தி வழியாக ஒரு வழியும், சிங்கவரம், மேலச்சேரி வழியாக மற்றொரு வழியும் உள்ளது. வளத்தி வழியாக மேல்மலையனுார் செல்வதற்கு 19 கி.மீ., துாரமும், மேலச்சேரி வழியாக செல்லும் போது 15 கி.மீ., துாரமும் உள்ளது.

இதில் அரசு பஸ்களை அதிகளவில் வளத்தி வழியாக இயக்குகின்றனர். கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சொந்த வாகனங்களில் வருபவர்கள் காலங்காலமாக மேலச்சேரி வழியாக சென்று வருகின்றனர்.

எனவே மேலச்சேரி வழியாக செல்லும் சாலையின் முக்கியத்துவம் கருதி செவலபுரை அருகே சங்கராபரணி ஆற்றில் கடந்த ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது. மேல்மலையனுார் வரை சாலைய விரிவுபடுத்தப்பட்டது. கிராம பகுதிகளில் சிமென்ட் சாலையும், கழிவு நீர் கால்வாயும் கட்டப்பட்டது.

நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை விரிவு படுத்திய பிறகு வனத்துறை மூலம் மரக்கன்றுகளை நடவது வழக்கம். இதற்கான கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறையினர் வனத்துறையினருக்கு அனுப்ப வேண்டும். வனத்துறையினர் மரக்கன்றுகளை நட்டு மூன்று ஆண்டுகள் பராமரித்து பிறகு நெடுஞ்சாலைத்துறையிடம் ஓப்படைத்து விடுவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேலச்சேரி வழியாக மேல்மலையனுார் செல்லும் சாலையை விரிவுபடுத்திய பிறகு இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் மரக்கன்று நடுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. வனத்துறையினருக்கும் கோரிக்கை மனு அனுப்ப வில்லை.

தற்போது இந்த சாலையில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் சாலையை ஒட்டி உள்ள இடத்தின் உரிமையாளர்கள் நெடுஞ்சாலை இடங்களை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்ட வாய்ப்புள்ளது.

இந்த வழியாக செல்லும் வாகனங்களால் கிராம பகுதியில் ஏற்படும் சுற்று சூழல் சீர் கேட்டை சமன் செய்யவும், மரக்களின்றி வெற்று இடங்களாக உள்ள சாலையை அழகு படுத்தவும் மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு மரக்கன்றுகளை நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us