/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபரிடம் வழிப்பறி: 2 பேர் கைது
/
வாலிபரிடம் வழிப்பறி: 2 பேர் கைது
ADDED : மார் 08, 2024 12:07 PM
செஞ்சி : பைக்கில் சென்ற வாலிபரிடம் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த வரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 45; விவசாயி. இவரது மகன் விஜய்பிரதாப், 19; இவர், கடந்த 6ம் தேதி இரவு 9:30 மணியளவில் தனது டிராக்டருக்கு டீசல் வாங்கிக் கொண்டு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அணையேரி கூட்ரோடு அருகே வந்தபோது, சிறுவன் உட்பட 2 பேர் பைக்கை வழிமறித்து விஜய்பிரதாப்பை கீழே தள்ளி அவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் 2000 ரூபாயை வழிப்பறி செய்து கொண்டு தப்பினர்.
இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் காரை கிராமத்தைச் சுந்தரமூர்த்தி மகன் சாருஹாசன், 22; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

