நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:, விழுப்புரம் அருகே ரவுடியிடம் வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வளவனுாரை சேர்ந்தவர் தீபக்ராஜ், 42; ரவுடியான இவர், நேற்று கெங்கராம்பாளையம் வழியாக பைக்கில் சென்றபோது, அங்கு நின்றிருந்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி கலைமகிழன்,35; தீபக்ராஜை மறித்து, கத்தியைக் காட்டி சட்டை பையில் வைத்திருந்த 1,800 ரூபாய் பணம் மற்றும் ஒரு சவரன் செயினையும் பறித்துச் சென்றார்.
இதுகுறித்து தீபக்ராஜ் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து கலைமகிழனை கைது செய்தனர்.

