ADDED : ஏப் 18, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் கூரை வீடு மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து சேதமானது.
சஞ்வீராயன்பேட்டை பகுதியிலுள்ள அரசு நுால கம் அருகே உள்ள சுப்ரமணி யர் கோவில் தெருவில் வசிப் பவர் ஆஷா. இவரது கூரை வீடு நேற்று மாலை தீடீரென்று தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலின் பேரில், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு நிலைய அலுவலர் அருணகிரிதாஸ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலுள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.