/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.22 கோடி ஒதுக்கீடு
/
பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.22 கோடி ஒதுக்கீடு
ADDED : மார் 15, 2025 08:50 PM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 22 கோடி ரூபாய் இழப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ம் ஆண்டில் சம்பா நெற்பயிருக்கு (நெல்-2) காப்பீடு செய்த 5,640 விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 22.04 கோடி இழப்பீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் உள்ள 794 கிராம விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, முதல்கட்டமாக சம்பா நெற்பயிருக்கு 165 கிராம விவசாயிகளுக்கு 22.04 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதர கிராமங்களுக்கு மகசூல் இழப்பு கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. பயிர் காப்பீடு செய்த மற்ற விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.