/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர் வீட்டில் ரூ.70 லட்சம் நகைகள் கொள்ளை : தியாகதுருகத்தில் துணிகரம்
/
ஆசிரியர் வீட்டில் ரூ.70 லட்சம் நகைகள் கொள்ளை : தியாகதுருகத்தில் துணிகரம்
ஆசிரியர் வீட்டில் ரூ.70 லட்சம் நகைகள் கொள்ளை : தியாகதுருகத்தில் துணிகரம்
ஆசிரியர் வீட்டில் ரூ.70 லட்சம் நகைகள் கொள்ளை : தியாகதுருகத்தில் துணிகரம்
ADDED : அக் 15, 2025 11:22 PM
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 70 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியாகதுருகம் தாய் நகரை சேர்ந்தவர் நடனசபாபதி, 57; பீளமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வடிவு, 55; ரிஷிவந்தியம் அடுத்த கீழத்தேனுார் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர். இவர்களது மகள் ஜனனி சின்னசேலம் அருகே தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக உள்ளார்.
மூவரும் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் மாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மாடி கதவு வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தியாதுருகம் போலீசில் நடனசபாபதி புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜன் சம்பவ நடந்த வீட்டில் விசாரணை நடத்தினார். அப்போது, அருகிலுள்ள போலீஸ்காரர் ஒருவரின் வீட்டின் மாடிப்படி வழியாக மர்ம நபர்கள் நடனசபாபதி வீட்டின் மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று திருடிச் சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
திருடு போன நகைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.