/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம் திருட்டு
ADDED : அக் 24, 2025 11:42 PM
கோட்டக்குப்பம்: வீட்டின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோட்டக்குப்பம், ரஹ்மத் நகர் சிராஜ் மில்லத் வீதி முதலாவது தெருவில் வசிப்பவர் காஜா மைதீன், 37; சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் அவர் வியாபாரத்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி பிள்ளைகளை அழைத்து கொண்டு, பள்ளியில் விட்டு, மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவர் பூட்டி சென்ற பின்புற வாசல் கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அறைக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.70 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

