/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ. 100 கொடுங்க... வீட்டில் ஓய்வு எடுங்க; 100 நாள் வேலை திட்டத்தில் தான் இந்த கூத்து

ADDED : அக் 28, 2024 10:55 PM

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடுபவர்கள் நகரங்களுக்கு குடி பெயர்வதை தடுக்கவும், வேலை இல்லாதவர்களின் வறுமையை போக்கவும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும், அதே நேரத்தில் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தி பாதுகாக்கவும் மத்திய அரசு தேசிய ஊரக வேலை திட்டத்தை கொண்டு வந்தது.
ஆனால், திட்டத்தின் நோக்கம் சிதைந்து பொது மக்களுக்கு இனாம் வழங்கும் தர்ம திட்டம் போல் ஊழல் மலிந்து விட்டது. இதில் புதுப்புது உத்திகளை கொண்டு ஊழல் செய்வதில் சிலர் கில்லாடிகளாக உள்ளனர். செஞ்சி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சியில் இந்த திட்ட பயனாளிகள் காலையில் 8:00 மணியளவில் வேலைக்கு வருபவர்கள் கேமரா முன்பு நின்று விட்டு வீட்டிற்கு சென்று விடலாம்.
வீட்டில் ஓய்வெடுக்கலாம் அல்லது வேறு வேலைகளுக்கும் செல்லலாம். இவர்கள் மீண்டும் 2:00 மணியளவில் கேமரா முன்பு நின்று விட்டு சென்று விடலாம். இவர்களின் வேலையை ஜே.சி.பி., இயந்திரம் செய்து விடும். இதற்காக பயனாளி வாரத்திற்கு ஒரு முறை 100 ரூபாய் கொடுத்தால் போதும்.
இவர்களின் கணக்கில் வாரத்திற்கு 1,500 முதல் 1,700 ரூபாய் வரை வேலை செய்ததை போல் வரவு வந்து விடும். இது போன்று நடப்பது ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரியுமா, அல்லது ஆளும் கட்சியின் நெருக்கடியால் கண்டும் காணாமல் உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.