/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு மாநாடு
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு மாநாடு
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு மாநாடு
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு மாநாடு
ADDED : மார் 08, 2026 05:12 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு நிலை மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு, மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தலைவர் நாகராஜன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பொன்னன் மாநாட்டு கொடியேற்றினார். மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி பேசினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொருளாளர் ராஜேந்திரன் வாழ்த்தி பேசினார்.
ஊராக வளர்ச்சித்துறை தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்துவது மற்றும் சங்க வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் ரத்தினம், சத்தியமூர்த்தி, ஸ்ரீராம், கார்த்திக், சுந்தரி, கற்பகம், ஸ்டெ ல்லா, வள்ளி, வினோ, பூவிழி, இந்திரா, சுமித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.