/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
/
மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
ADDED : மார் 08, 2026 05:11 AM

திண்டிவனம்: 'தமிழகத்தில் சட்டசபை உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், நேற்று காலை, பட்டாளி மகளிர் சங்கம் சார்பில், மகளிர் தின விழா நடந்தது. இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, மாநில மகளிர் அணி தலைவர் சுஜாதா, கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் மகளிர்கள் பங்கேற்ற கராத்தே போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பெண்கள் மகளிர் தின உறுதிமொழியேற்றனர்.
தொடர்ந்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், 'மகளிர் நாட்டை ஆள வேண்டும். மகளிரை இழிவுப்படுத்திய காலம் சென்று, மகளிர் மேம்பாட்டுக்காக, மகளிரே முன்வந்து திட்டங்களை தீட்ட வேண்டும். அப்படிப்பட்ட காலம் வரவேண்டும்.
என்னுடைய ஆசை தமிழகத்தில் சட்டசபை உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும். அது நடக்குமா, சாத்தியமா. ஆண்கள் விடுவார்களா, சட்டம் இடம் கொடுக்குமா பல கேள்விக்குறிகளுக்கு மத்தியில்தான் மகளிர் சமூகம் வழ்ந்து வருகிறது. மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்' என்றார்.
தொடர்ந்து, அவர் நிருபர்கள், 'கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்பட்டதா என கேட்டதற்கு, 'ஒன்றிரண்டு நாட்களில் தெரியவரும்' என்றார்.
நாளை 9ம் தேதி சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்குமா என கேட்டதற்கு, 'எல்லாம் நல்லபடியா நடக்கும்' என பதில் அளித்தார்.

