sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் உழவர் சந்தையில் விற்பனை ரூ. 20.43 கோடி! ஓராண்டில் 4,759 டன் காய்கறிகள் வரத்து

/

விழுப்புரம் உழவர் சந்தையில் விற்பனை ரூ. 20.43 கோடி! ஓராண்டில் 4,759 டன் காய்கறிகள் வரத்து

விழுப்புரம் உழவர் சந்தையில் விற்பனை ரூ. 20.43 கோடி! ஓராண்டில் 4,759 டன் காய்கறிகள் வரத்து

விழுப்புரம் உழவர் சந்தையில் விற்பனை ரூ. 20.43 கோடி! ஓராண்டில் 4,759 டன் காய்கறிகள் வரத்து


ADDED : பிப் 10, 2026 03:25 AM

Google News

ADDED : பிப் 10, 2026 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, ரயில் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான வளாகத்தில் கடந்த 2000ம்ஆண்டு ஜனவரி 9ம் தேதி உழவர் சந்தை துவக்கப்பட்டது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயன்பெறும் வகையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி நேரில் வந்து உழவர் சந்தையை திறந்து வைத்தார்.

தற்போது இந்த உழவர் சந்தையை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் சுமதி மேற்பார்வையில், சந்தை நிர்வாக அலுவலர் (வேளாண்மைஅலுவலர்) அருண்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜாத்தி மற்றும் கொளஞ்சி ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மாவட்டத்தில்போதுமான அளவு நீர் ஆதாரம் இருப்பதன் காரணமாக இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுடன், பணப் பயிரான பசுமை காய்கறிகளையும், தென்னை, வாழை போன்ற பயிர்களையும் சாகுபடி செய்துவருகின்றனர்.

காய்கறிகள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கவும், நுகர்வோர்கள் பசுமையான காய்கறிகளை வாங்கும் வகையில், விழுப்புரம் நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

மொத்தம் 48 கடைகள், 20 தரை கடைகள் உள்ளது. இங்கு 194 விவசாயிகள் பதிவு செய்து தினசரி விளைபொருட்களை தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், அரசு பஸ்களில் இலவசமாக காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

அத்துடன் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலமாக கேரட், பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்ட வெளி மார்க்கெட் காய்கறிகளும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் உழவர் சந்தை செயல்படுகிறது. விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு, கோலியனுார், வி.மருதுார் , அற்பிசம்பாளையம், சாலையாம் பாளையம், சிறுவந்தாடு, வளவனுார், நரையூர், சொர்ணாவூர், பாக்கம், ராம்பாக்கம், விராட்டிக்குப்பம்.

நன்னாடு, காங்கியனுார், காணை,மாம்பழப்பட்டு, பெரும்பாக்கம், கீழ்பெரும்பாக்கம், பொய்யாப்பாக்கம், காகுப்பம், சிறுவாலை, அதனுார், சூரப்பட்டு, ஏழுசெம்பொன், சங்கீதமங்கலம், கெங்கராம்பாளையம்.

ஓட்டேரிபாளையம், பிடாகம், அரசூர்,திருவெண்ணெய்நல்லுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள்மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில் 4,759.46 டன் காய்கறிகள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 லட்சத்து 98 ஆயிரத்து 424 நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள்,மொத்தமாக 20 கோடியே 43 லட்சத்துக்கு 73 ஆயிரத்து 134 மதிப்பில் விற்பனை ஆனது.






      Dinamalar
      Follow us