/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா
/
கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 12, 2025 10:17 PM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட தி.மு.க., சார்பில், நாளை சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது.
இதுகுறித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் டாக்டர் கவுதமசிகாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நாளை (14 ம் தேதி) காலை 8: 30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது. வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்குகிறார். தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி முன்னிலை வகிக்கிறார்.
தொடர்ந்து, வரும் 15ம் தேதி, திருவள்ளுவர் தின விழா, அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி ஆகியோர் தலைமையில் கொண்டாடப்படுகிறது. காலை 8:00 மணிக்கு, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
இவ்விழாவில், எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் அணியினர் உட்பட அனைவரும் பங்கேற்குமாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.