/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சம்போதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
சம்போதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 07, 2025 01:41 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தொரவி சம்போதியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
தொரவியில் உள்ள சம்போதியம்மன் கோவில், குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது.
கோவில் கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், யாக சாலை பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை 9.30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை முடிந்து கடம்புறப்பாடும், காலை 10.15 மணிக்கு சம்போதி அம்மனுக்கு புனித நீருற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
பனையபுரம் பாபு அய்யர் தலைமையில் செல்வமுருகன் யாகசாலை பூஜை மற்றும் அபிேஷகங்களை செய்தனர்.
தொரவி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.