ADDED : ஜூன் 26, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு வேனில் மணல் கடத்திக் கொண்டிருந்த 3 பேரை பிடிக்க முயன்றனர்.
அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 54; என்பவர் மட்டும் சிக்கினார். அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தப்பியோடிய பனப்பாக்கம் சரவணன், பி.குச்சிப்பாளையம் பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

