/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய்மைக் காவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
துாய்மைக் காவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 16, 2024 06:21 AM
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட துாய்மைக் காவலர்களுக்கும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வலிறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநிலச் செயலாளர் அப்பாதுரை தலைமை தாங்கினார். மாநில பிரசார செயலாளர் ரதிதேவி வரவேற்றார்.
களப்பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் சிறப்புரையாற்றினர்.
மாநில துணைத் தலைவர் வீரப்பன், மணிக்கண்ணன், ஜெயக்குமார், கஸ்துாரி, பாண்டியன், தங்கராசு, தணிகைவேல், கேசவன், சுரேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.