/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
/
சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 10, 2025 12:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சோழகனுார் சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர் பூபதி 584 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி குணஸ்ரீ 581, மாணவர் ஜெயகணேஷ் 569, மாணவி ரூபிகா 564 மதிப்பெண் பெற்று முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடம் பிடித்தனர்.
வேதியியல் பாடத்தில் 3 மாணவர்களும், உயிரியல் மற்றும் கணினி அறிவியலில் தலா 1 மாணவர் 100க்கு100 மதிப்பெண் பெற்றனர்.
பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சரஸ்வதி சென்ட்ரல் பள்ளி நிர்வாகி முத்துசரவணன், நிர்வாக அலுவலர் முத்துசிவஞானம், பள்ளி முதல்வர் இந்துமதி உட்பட துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர்.
இப்பள்ளி மாணவர்கள் முதன் முறையாக பிளஸ் 2 பொதுத்தேர்வு பங்கேற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.