/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 07, 2024 11:37 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படத்தப்பட்ட, சீர்மரபு மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login ல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும்.
கல்வி உதவித்தொகை இணையதளம் (ஸ்காலர்ஷிப் போர்டல்) கடந்த 1ம் தேதி முதல் இயங்கும் போர்டலில் விண்ணப்பங்களை மாணவர்கள் வரும் 29ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்பிக்க வேண்டும்.
இது சம்பந்தமாக மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

