
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் கங்கா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் சகாதேவன் வரவேற்றார். தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சுப்ராயன் தலைமை தாங்கி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் தேவதாஸ், அஜித்குமார் ஆகியோர், கல்வியின் தேவை குறித்து பேசினர்.
பள்ளி முதல்வர் பாக்கியராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

