/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளிகளில் காலை உணவு திட்டம் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம்
/
பள்ளிகளில் காலை உணவு திட்டம் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம்
பள்ளிகளில் காலை உணவு திட்டம் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம்
பள்ளிகளில் காலை உணவு திட்டம் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம்
ADDED : நவ 01, 2024 06:33 AM

விழுப்புரம்: முதல்வரின் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் தொடர்பாக, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் கலெக்டர் பழனி தலைமை தாங்கி, கூறியதாவது,'முதல்வரின் காலை மற்றும் மதிய உணவு திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக, நகர்புற பகுதிகளில் 1,206 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், முதல்வரின் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்படட்டது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கியதாக, தெரிவித்தார்.
கூட்டத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குநர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இந்திராதேவி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.