/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
படிப்பு வராததால் விரக்தி பள்ளி மாணவர் தற்கொலை
/
படிப்பு வராததால் விரக்தி பள்ளி மாணவர் தற்கொலை
ADDED : அக் 12, 2025 04:23 AM
திண்டிவனம் : படிப்பு சரியாக வராத விரக்தியில் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டை, 7 வது தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக்ல்லா மகன் முகமது ஷானாவாஸ்,17;
இவர் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஷானாவாஸ் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்த திண்டிவனம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது தந்தை திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகனுக்கு சரியாக படிப்பு வராததால் மன உளைச்சலில் அவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.