ADDED : பிப் 11, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: பெரியதச்சூர் அருகே கால் வலியால் அவதியடைந்த மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெங்கந்துாரைச் சேர்ந்தவர் சிவகுமார் மகன் மோகன்ராஜ், 13; இவர் ரெட்டணை அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன் வலது கால் உடைந்து வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.