ADDED : நவ 05, 2026 08:20 PM

விக்கிரவாண்டி: பள்ளி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று பஸ் வசதி துவக்கி வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி ஒன்றியம், வா பகண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், புதிய வகுப்பறை கட்டடத்தை அமைச்சர் ஆனந்த் திறந்து வைத்தார்.
அப்போது மாணவர்கள் பஸ் வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர். அமைச்சர் ஆனந்த் உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசி பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து, இன்று (நவ.,5) மாலை விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் பகண்டையிலிருந்து, தடம் எண்:1 ஜெ., என்ற டவுன் பஸ்சை, விழுப்புரத்திற்கு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
போக்குவரத்து கழக மேலாளர் ஸ்ரீதரன், த.வெ.க., மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரித்திவிராஜ், ஒன்றிய செயலாளர் சேகர், பா.ம.க., ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரவி, கருணாகரன், சுரேஷ், ரகு உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
