/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : டிச 29, 2024 06:24 AM

மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
மயிலம் ஒன்றியம் ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஏரோமியாஸ் பிஸ்கோ வரவேற்றார்.
விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழுப்புரம் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சண்முக வடிவேல், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி முரளிதரன் ஆகியோர் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
பள்ளி வளாகத்தில் மாணவர்களின் சார்பில் வைத்திருந்த அறிவியல் படைப்புகளை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டனர் சிறந்த படைப்புகளுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டினர். பள்ளி முதல்வர் வாழ்த்தி பேசினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.