/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செய்தியாளர்களை தாக்க முயன்ற பவுன்சர்கள் சட்டையை மடித்துக்கொண்டு பாய்ந்த சீமான்
/
செய்தியாளர்களை தாக்க முயன்ற பவுன்சர்கள் சட்டையை மடித்துக்கொண்டு பாய்ந்த சீமான்
செய்தியாளர்களை தாக்க முயன்ற பவுன்சர்கள் சட்டையை மடித்துக்கொண்டு பாய்ந்த சீமான்
செய்தியாளர்களை தாக்க முயன்ற பவுன்சர்கள் சட்டையை மடித்துக்கொண்டு பாய்ந்த சீமான்
ADDED : ஆக 18, 2025 04:15 AM
செஞ்சி: செஞ்சியில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றபோது, சீமான் சட்டையை மடிந்து கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்று செஞ்சி கோட்டையை மராட்டியர்களின் ராணுவ கேந்திரமாக யுனெஸ்கோ அறிவித்ததை மாற்றி, தமிழ் மன்னன் கோனேரிகோன் கோட்டை என அறிவிக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டம் துவங்குவதற்கு முன்பு மழை பெய்ததால், செய்தியாளர்கள் அருகில் இருந்த கடைகளில் ஒதுங்கி நின்றிருந்தனர். நிர்வாகிகள் பேசி முடித்துதும். 7:40 மணியளவில் சீமான் மேடையேறினார்.
அப்போது செய்தியாளர்கள் சீமானை படம் எடுக்கவும், செய்தி சேகரிக்கவும் மேடை அருகே சென்றனர். அவர்களை பவுன்சர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். செய்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபோது, பவுன்சர்கள் செய்தியாளர்களை நெட்டி தள்ளி தாக்க முயன்றனர்.
அப்போது செய்தியாளர்கள் கூச்சல் எழுப்பினர். இதை மேடையில் இருந்து பார்த்த சீமான், ஆவேசமாக சட்டை கையை மடித்து கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவர் வந்த வேகம் செய்தியாளர்களை தாக்க வந்ததைபோல் இருந்தது. அதற்குள் பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீசார் செய்தியாளர்களை அங்கிருந்து மீட்டு வெளியேற்றினர்.
சீமான் மேடையை விட்டு இறங்கி கீழே வந்ததை பார்த்த தொண்டர்களும், ஆக்ரோஷமாக மேடையை நோக்கி குவிந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பை கூட தவிர்த்துவிட்டு சீமான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.